சென்னை-
நம்பிக்கை இணையம், செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், பல்பொருள் இணையம், இயற்கை மொழி செயலாக்கம், குரல் பயணர் இடைமுகம், பெரிய தரவு , பகுப்பாய்வு, மெய்நிகர் உண்மை போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு தமிழ்நாடு ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில் ‘டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருது’ பெற்றுள்ளது. இந்த விருது 30-ஆம் தேதி நடைபெற்ற ‘டிஜிட்டல் இந்தியா -2020 ’விருதுகள் காணொலி மூலம் நடந்த விழாவில், ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மைத் திட்டம் குறித்த மென்பொருள் முன்மாதிரியான தயாரிப்பு என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துக்கு ‘டிஜிட்டல் இந்தியா-2020 வெள்ளி விருது’ வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் இந்த விருதை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.