லூனா திட்டம் என்பது சோவியத் ஒன்றியத்தினால் 1959-லிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். இப்பயணத் திட்டம் “லூனிக்” என்றும் சிலவேளைகளில் கூறப்படுவதுண்டு.
இவை சந்திரனைச் சுற்றவோ அல்லது தரையிறங்கவோ அனுப்பப்பட்டவை ஆகும். விண்ணில் இறங்கிய முதலாவது விண்கலம் லூனா 2 ஆகும். இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. வேதியியல் பகுப்பாய்வு, ஈர்ப்பு, வெப்பநிலை, மற்றும் கதிரியக்கம் போன்ற பல ஆய்வுகளை நடத்தின.
லூனா திட்டத்தின் 21- ஆவது விண்கலம் 1973- ஆம் ஆண்டு இதே தேதியில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது.