ஏ.கே,பி.கே வழங்கும் நிதி ஆலோசனை

பல மாநிலங்கள் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன் மேலாண்மை திட்டம் அவசியமானது என்பதை உணர்ந்து, வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் ஆலோசனை,  கடன் மேலாண்மை நிறுவனம் (ஏ.கே.பி.கே)  வழிகாட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.

 ஏ.கே.பி.கே நேற்று வெளியிட்ட  ஓர் அறிக்கையில், தனது வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையைத் தணிக்க உதவும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறது.

திருப்பிச் செலுத்தும் உதவியில் வாடிக்கையாளர் கோரிக்கைகள் ஏ.கே.பி.கே  மதிப்பீட்டிற்கு உட்பட்டு மாதாந்திர தவணைகள் ஒத்திவைத்தல் அல்லது குறைத்தல் ஆகியவை அடங்கும்.

இந்த சேவைகள் அனைத்தும் இலவசம், அதன் சார்பாக செயல்பட ஏ.கே.பி.கே எந்தவொரு முகவர்களையும் அல்லது மூன்றாம் தரப்பு பிரதிநிதிகளையும் ஒருபோதும் நியமிக்கவில்லை. என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏ.கே.பி.கே வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் திருப்பிச் செலுத்தும் உதவிக்கு http://customer.akpk.org.my/ இல் விண்ணப்பிக்கலாம் அல்லது மேலும் தகவலுக்கு https://www.akpk.org.my ஐப் பார்வையிடலாம்.

இதற்கிடையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்களது நிதி உதவி , தவணை நிவாரணம் (FAIR) திட்டத்தின் கீழ் ஆறு மாத கால அவகாசம் வழங்குவதாக அஃபின் வங்கி பி.டி அஃபின் இஸ்லாமிய வங்கி பி.டி. குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ வான் ரஸ்லி அப்துல்லா வான் அலி தெரிவித்தார்.

FAIR நிதி நிவாரணத் திட்டத்தின் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்கான கடன் தொகையை ஒத்திவைக்க முடியும் என்றார் அவர்.

நிதி நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, வாடிக்கையாளர்கள் 03-8230 2222 என்ற எண்ணில் வங்கியைத் தொடர்பு கொள்ளவோ, அருகிலுள்ள அஃபின் வங்கி அல்லது அஃபின் இஸ்லாமிய வங்கி கிளையைப் பார்வையிடவோ அல்லது yourvoice@affinbank.com.my என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் அனுப்பவோ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here