கோலாலம்பூர்: பழைய கிள்ளான் சாலையில் ஒரு பெண்ணின் நெக்லஸ் பறிக்கப்பட்ட திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
31 மற்றும் 34 வயதுடைய இருவரும் வெள்ளிக்கிழமை (ஜன. 15) அதிகாலை 2.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தாமான் ஶ்ரீ மஞ்சாவில் கைது செய்யப்பட்டதாக பிரிக்ஃபீல்ட்ஸ் ஒ.சி.பி.டி உதவி ஆணையர் அனுவார் ஒமர் தெரிவித்தார்.
இந்த வழிப்பறி திருட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி அன்று நடந்தது. பேர்ல் பாயிண்ட் அருகே ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர்களில் ஒருவர் அந்த பெண்ணின் கழுத்தணியைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார் என்று சனிக்கிழமை (ஜன. 16) தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
சந்தேக நபர்களிடமிருந்து ஆறு மொபைல் போன்கள், ஒரு பணப்பையை, ஏடிஎம் அட்டை, ஸ்வெட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஏசிபி அனுவார் தெரிவித்தார்.
31 வயதான சந்தேக நபருக்கு 25 போலீஸ் குற்றப் பதிவுகள் இருந்தன. மற்ற சந்தேக நபருக்கு 21 போலீஸ் பதிவுகள் இருந்தன. அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) வரை தடுப்புக் காவல் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
எந்தவொரு குற்றச் செயல் குறித்து தகவல் உள்ள எவரும் 03-22979222 என்ற எண்ணில் பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அன்னுவார் நினைவுறுத்தினார்.