157 முறை தோல்வி; 158ல் வெற்றி! இதுதான் விடாமுயற்சி!

ஓட்டத்தெரியாதவர்களுக்கு எல்லாம் ஓட்டுநர் உரிமம் நம்மூரில் ஈசியாக கிடைத்து வந்தது. லஞ்சம் கொடுத்தால் ஓட்டுநர் உரிமம் என்பது ரொம்ப எளிதாக கிடைத்து வந்த நிலையில் தற்போதுதான் அது ரொம்ப கடினமாக இருக்கிறது. 8 போட்டால்தான் லைசென்ஸ் என்கிற நிலை வந்திருக்கிறது.

8 போடாமலேயே லைசென்ஸ் கொடுப்பதாலும் அதன் மூலமாக என்னென்னெ தீங்குகள் நேருகின்ற என்னபவற்றை எல்லாம் ‘இந்தியன்’ படம் உணர்த்தியது. இப்போதும் கூட சம்திங் கொடுத்தால் லைசென்ஸ் எல்லாம் இங்கே ஈஸியாகத்தான் இருக்கிறது என்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் லைசென்ஸ் கொடுப்பதில் ரொம்ப கெடுபிடி காட்டப்படுகிறது. அதனால்தான் ஒருவர் 157 முறை முயன்றும் தோல்வி பெற்று லைசென்ஸ் வாங்க முடியாமல், 158 வது முறையில்தான் லைசென்ஸ் வாங்கி இருக்கிறார். இதற்காக அவர் இதுவரைக்கும் 3 லட்சம் செலவு செய்திருக்கிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த அந்த நபர், ஓட்டுநர் லைசென்ஸ் பெற விண்ணப்பித்து 100 முறைக்கு மேல் டெஸ்டுக்கு சென்றும் தன்னால் வெற்றி பெறமுடியவில்லை. ஆனாலும் மனிதர் அசராமல், தொடர்ந்து முயற்சி செய்து வந்து 157 வது முறையும் தோல்வியுற்றார். அப்போதும் அவர் போதும் என்று அலுத்துக்கொள்ளவில்லை.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியாக 158வது முறை டெஸ்ட்டில் வெற்றி பெற்றுவிட்டார். இதற்காக அவர் ஒவ்வொரு முறையும் தேர்வு கட்டணம் செலுத்தியதை எண்ணிப்பார்த்தால் 3 லட்சம் ஆகிறது.

இவர் மட்டுமல்ல, இன்னும் சிலரும் இப்படியான தொலைமுயற்சியில் அசத்தி இருக்கிறார்கள்.

டிரைவிங் மற்றும் வாகன தர நிர்ணய நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 157 முறை தோற்றுப்போனதில் முதலிடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக 117 முறை டெஸ்ட்க்கு சென்றும் தோல்வியடைந்து விட்ட 30வயது பெண் 2வது இடத்தில் இருக்கிறார்.

94வது முயற்சியில் வெற்றி பெற்ற 44வயதான பெண், 3வது இடத்தில் இருக்கிறார்.

72வயதான ஆங்கிலேயர் ஒருவர் 43 முயற்சியில்தான் வெற்றி பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் 47வயது பெண் ஒருவர் 41 முறை முயன்றும் வெற்றி பெற முடியவில்லை.

எந்த நோக்கத்திற்காக என்றாலும் அதில் சோர்வடையாமல் விடாமுயற்சி எடுக்க வேண்டும் என்பதற்கு இவர்களிள் செயல், ஜெயிக்க நினைக்கும் பலருக்கும் ஒரு எனர்ஜி டானிக்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here