அரசாங்கத்தின் அனுமதிக்கு பிரெஸ்மா நன்றி தெரிவித்து கொள்கிறது

அரசாங்கம் நாளை 22.1.2021 வெள்ளிக்கிழமை தொடங்கி இரவு 10 மணி வரை உணவகங்கள் இயங்கலாம் என்ற செய்தி உணவக உரிமையாளர்களுக்கு நிம்மதி பெருமூச்சை வரவழைத்து இருப்பதாக மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவ்ஹர் அலி தய்யூப்கான் (டத்தோ அலி  மாஜு)  தெரிவித்தார்.

கடந்தாண்டு தொடங்கப்பட்ட எம்சிஓவினால் வர்த்தகர்கள் குறிப்பாக உணவக உரிமையாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தற்பொழுது அரசாங்கத்தின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அதே போல் வாடிக்கையாளர்கள் எஸ்ஓபியை  கடைபிடித்து உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அரசாங்கம் அனுமதியளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

கடையில் அமர்ந்து உணவருந்தும்போது வாடிக்கையாளர்கள்  கூடுதலாக உணவருந்த வாய்ப்புகள் இருப்பதால் எங்களின் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று கருதுகிறோம் என்று டத்தோ அலி மாஜு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here