மாட்டு சாணத்தை அமேசானில் ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர்!

மாட்டு சாணத்தை அமேசானில்ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர் ஒருவர் அதன் சுவை குறித்து கருத்து தெரிவித்திருப்பது விநோதமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அமேசான் செயலி மூலம் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அதற்கு உதாரணம் தான் இந்த நிகழ்வு. வாடிக்கையாளர் ஒருவர் அமேசான் மூலம் மாட்டு சாணத்தை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

மாட்டு சாணம் வரட்டிக்கு, ஹோமம், பூஜை செய்ய பயன்படுத்தலாம் என அமேசானில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மாட்டு சாணத்தை ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும், அதன் சுவை குறித்தும் அந்த நபர் பதிவிட்டுள்ளார்.

அதாவது மாட்டு சாணத்தின் சுவை மிக மோசமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.அதன் சுவை சேறு போல் இருந்தது என்றும், தனக்கு டெலிவரி செய்யும் முன்பே பார்சல் பிரிக்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. சாணம் சாப்பிடுவதற்கு அல்ல என்று அமேசான் குறிப்பிட்டுள்ளது. அதனால் அந்த நபர் கிண்டலாக பதிவிட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here