இந்திய குடியரசு
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
* 1837 – மிச்சிகன் ஐக்கிய அமெரிக்காவின் 26ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது. * 1841 – ஐக்கிய இராச்சியம் ஹாங்காங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது. * 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது. * 1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வெர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.
* 1924 – சென் பீட்டர்ஸ்பர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது. * 1926 – ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார். * 1930 – இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது. * 1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர். * 1949 – ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது