கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மாய்சுரி அகோங் துங்கு ஹஜா அஜீஸா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் தைப்பூச வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இஸ்தானா நெகாரா பேஸ்புக் பதிவில் புதன்கிழமை (ஜன.27) அவர்களின் வாழ்த்தினை தெரிவித்தனர். இந்த புனித சந்தர்ப்பத்தில் எங்கள் இந்து நண்பர்கள் அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட, மகிழ்ச்சியான மற்றும் அமைதியான கொண்டாட்டத்தை நாங்கள் விரும்புகிறோம் என்று அவர்கள் கூறினர். – பெர்னாமா