கட்சி தொடங்குகிறார் ரஜினிகாந்தின் மனைவி லதா!?

ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலனை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வருவதில் இருந்து பின்வாங்கினார். அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் அவரது முடிவு அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.

இந்நிலையில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

அப்போது பேசிய அவர் , தனது தாயார் லதா ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சி வெற்றி அடைய வேண்டும் என்றும் , ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் எனவும் சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சி குறித்து ஒரு சில நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here