பாரம்பரியத்தை உடைத்து பெண்ணுக்கு சிறப்பு பொறுப்பு. இதுதான் முதன்முறை.!

கத்தோலிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் பிஷப் சபையின் உயர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

போர் பிரான்சில் நேற்று பிஷப் சபைக்கு புதிய துணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் கத்தோலிக்க பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக வரலாற்றிலேயே முதன் முறையாக பிஷப் சபையின் உயர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளனர். அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 52 வயதுடைய சிஸ்டர் நத்தலி பெக்கர்ட் என்பவர்.

இவர் புகழ்பெற்ற HEC வணிக கல்லூரியின் மேலாண்மை முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதன்பின் பாஸ்டனில் மேலும் உயர் படிப்புகள் படித்துள்ளார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மூத்த கத்தோலிக்க ஆலோசகராக இருந்துள்ளார். சாதாரண மக்களையும் தேவாலயத்தில் பங்கு வகிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை நிறைவேற்றினார். இந்நிலையில் இவருக்கு பிஷப் சபையின் துணைச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here