சுனாமி அச்சுறுத்தல் இல்லை
ஜப்பானில் இன்று 7.0 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி
டோக்கியோ:
ஜப்பானின் புகுஷிமா மாகாணம், நமீ நகரின் அருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நமீ நகரில் இருந்து 90 கிமீ கிழக்கு-வடகிழக்கில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் உணரப்பட்டதும் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும், கடல் அலைகள் உயரமாக எழும்பும் என்றும் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியது. இதனால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.