– தற்காலிகமாக நிறுத்தம்
அமெரிக்காவின் டெனவர் நகரில் இருந்து ஹோனாலுலு நகருக்கு 231 பயணிகளுடன் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. மேலும் விமானத்தின் என்ஜின் பாகங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன.
இதையடுத்து பிராட் மற்றும் விட்னி பி.டபுள்யூ 4000 சீரீஸ் என்ஜின்களுடன் கூடிய போயிங் 777 விமானங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து உலகம் முழுவதும் பிராட், விட்னி பி.டபுள்யூ 4000 சீரீஸ் என்ஜின்களுடன் கூடிய போயிங் 777 விமானங்களின் சேவையை உடனடியாக நிறுத்தும்படி போயிங் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.