ஆபத்தை நோக்கி செல்லும் குழந்தை

– துரிதமாகச்  செயல்பட்ட நாய்

நாய் ஒன்று சிறு குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

உலகின் மூலை முடுக்கெல்லாம் நாள்தோறும் ஒவ்வொரு விஷயங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

அதே போன்று சிறு குழந்தை ஒன்று ஆற்றங்கரைக்கு செல்கிறது. அப்போது அந்த குழந்தை ஆற்றில் தவறி விழப்போகின்றது. இதை கவனித்த சிறுமியின் நாய் ஓடி வந்து குழந்தையை இழுத்துப் கரையோரத்தில் விட்டு விடுகிறது.

இந்த வீடியோவை இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நாயின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here