சீனா மீண்டும் சேட்டை

 –ராணுவ அதிகாரி தகவல்

புதுடில்லி:
சிக்கிம், அருணாச்சல பிரதேச எல்லையில், மூன்று புதிய பாலங்கள், 66 கி.மீ., சாலை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணியில், சீன ராணுவம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரி பகுதியில் இருந்து, சீனப் படையினர் திரும்பப் பெறப்பட்டு வந்தாலும், மேற்குப் பகுதி யான, கோக்ரா ஹாட் ஸ்பிரிங் பகுதியில் இன்னும் பதற்றம் குறையவில்லை.
உண்மையான எல்லைக் கட்டுப்பாடு பகுதியான மப்டோலா பாஸ் பகுதியில், சீனப் படையினர் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. தெப்சாங் பல்ஜ் பகுதியிலும், இதே நிலை தொடர்கிறது.
மேலும், சிக்கிம் – அருணாச்சல பிரதேச எல்லையில், ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை, சீனப் படையினர் விரைவாக செய்து வருகின்றனர். வடக்கு சிக்கிமின் நகுலா பாஸ் பகுதியில், சாலை வசதிகள் ஏற்படுத்தப் பட்டு, சீனப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன.
அருணாச்சல பிரதேசத்தின், அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில், மூன்று புதிய பாலங்கள், 66 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்கும் பணிகளில், சீனப் படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
உத்தரகண்ட் எல்லையின் மத்தியப் பகுதி உட்பட, எல்லை முழுதும் கண்காணிப்பை, நம் படையினர் தீவிரப்படுத்தும் நிலையில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here