– ரூ.71 கோடிக்கு விற்ற நடிகை ஏஞ்சலினா ஜோலி
இந்த புகழ்பெற்ற ஓவியம் பல்வேறு நபர்களின் கைக்கு சென்று இறுதியாக கடந்த 2011- ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் கையில் வந்து சேர்ந்தது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற ஏலத்தின் வின்ஸ்டன் சர்ச்சிலின் இந்த ஓவியத்தை அதிக விலை கொடுத்து தன்வசம் ஆக்கினார் ஏஞ்சலினா ஜோலி. இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் வின்ஸ்டன் சர்ச்சிலின் கவ்டவ்பியா மசூதியை நடிகை ஏஞ்சலினா ஜோலி ஏலத்தில் விட்டார்.
இந்த ஓவியம் 2 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடியே 38 லட்சத்து 22 ஆயிரம்)-க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியம் 7 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.71 கோடியே 33 லட்சத்து 97 ஆயிரம்)-க்கு ஏலம் போனது.