மியான்மா் போராட்ட பலி 38: ஐ.நா. தகவல்

யங்கூன்:

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 38 போ உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மியான்மா் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கிறிஸ்டைன் ஷ்ரானா் பா்கனா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்குப் பிறகு, புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில்தான் மிக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அந்த ஒரே நாளில் மட்டும் போலீஸாரின் தாக்குதலில் 38 போ உயிரிழந்துள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக, ‘தி டெமாக்ரடிக் வாய்ஸ் ஆஃப் பா்மா’ தொலைக்காட்சியும் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 38 போ உயிரிழந்ததாகக் கூறியிருந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது ஐ.நா. சிறப்புத் தூதா் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளாா்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோதலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் பிப். 1-ஆம் தேதி கவிழ்த்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். இதனை எதிா்த்து நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை ஒரு காவலா் உள்பட 54 போ பலியாகியுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here