ஜார்ஜ் டவுன் : போலீஸ் மற்றும் தெனகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இங்குள்ள நான்கு வளாகங்களில் பிட்காயின் சுரங்க நடவடிக்கைகளை நடத்துவதற்காக மின்சாரம் திருடப்பட்டதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தின.
தாமான் ஶ்ரீ டெலிமா மற்றும் ஜூரு ஜெயா வர்த்தக மையத்தில் நடந்த ஒரு நடவடிக்கையில் 28 மற்றும் 51 வயதுக்குட்பட்ட 6 பேர் சட்டவிரோத தொடர்புகளை ஏற்படுத்தி மின்சாரம் திருடியதற்காக கைது செய்யப்பட்டதாக பினாங்கு சிஐடி தலைவர் எஸ்ஏசி ரஹிமி முகமட் ராய்ஸ் தெரிவித்தார்.
உளவுத்துறை மற்றும் கண்காணிப்பைத் தொடர்ந்து போலீஸ்ம ற்றும் டி.என்.பி நான்கு கடை வளாகங்களிலும் சட்டவிரோத தொடர்புகளைக் கண்டறிந்தன. 322 பிட்காயின் சுரங்க இயந்திரங்கள், செல்போன்கள் (ஐந்து), மடிக்கணினிகள் (மூன்று) மோடம் (ஏழு), உட்பட ஏராளமான உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மின் கேபிள்கள் மற்றும் இரண்டு கார்கள், என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் இரண்டு மாடி மற்றும் மூன்று மாடி வளாகங்கள் ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக ரஹிமி கூறினார், இதனால் TNB க்கு மாதந்தோறும் நூறாயிரக்கணக்கான ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
பொதுவாக, இத்தகைய கும்பலை கண்டறிதலைத் தவிர்ப்பதற்காக மேல் மாடியில் தங்கள் நடவடிக்கைகளை நடத்துவதற்கு முன் இரண்டு மற்றும் மூன்று மாடி வணிக வளாகங்களைத் தேடும். ஏனெனில் இந்த செயல்முறை ஒரு பெரிய சத்தத்தை வெளியிடுகிறது என்று அவர் கூறினார்.
ஆறு பேரில் இருவர் மீது கிரிமினல் பதிவுகள் இருப்பதாகவும், அவர்களில் மூன்று பேர் மூன்று நாட்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ரஹிமி கூறினார். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379 மற்றும் 427 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
வளாகத்தின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் பிட்காயின் சுரங்க நடவடிக்கைகளிலிருந்து ஒவ்வொரு மாதமும் நூறாயிரக்கணக்கான ரிங்கிட்டுகள் வருவாயை ஈட்ட முடியும் என்று தெரிய வந்துள்ளது. – பெர்னாமா