– ஆய்வில் சுவாரசிய தகவல்கள்
இதற்காக 700 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
2019 ஜனவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் 10 நகரங்களில் பெண்கள் வெளியிட்ட 5 லட்சத்து 22 ஆயிரத்து 992 பதிவுகளும் ஆராயப்பட்டன.
இதில் பெண்கள் டுவிட்டரில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவது தெரியவந்துள்ளது. பெண்களின் டுவிட்டர் பதிவுகள் 9 கருப்பொருளை பிரதானமாக கொண்டுள்ளன.
இந்த ஆய்வு முடிவில் வெளியான சுவாரசியமான தகவல்கள்:-
* பெண்களின் டுவிட்டர் பதிவுகளில் 24.9 சதவீதம், பேஷன், புத்தகங்கள், அழகு குறிப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், சாப்பாடு பற்றி அமைந்துள்ளன.
* நாட்டு நடப்புகள் பற்றி 20.8 சதவீத பதிவுகள் அமைந்திருக்கின்றன.
* கொண்டாட்ட தருணங்கள் தொடர்பாக 14.5 சதவீத பதிவுகள் செய்யப்படுகின்றன.
* சமூகம் தொடர்பாக 11.7 சதவீத பதிவுகளும், சமூக மாற்றங்கள் குறித்து 8.7 சதவீத பதிவுகளும் உள்ளன.
* டுவிட்டரை பொறுத்தமட்டில் அன்றாட உரையாடல்கள், கொண்டாட்ட தருணங்கள்தான் அதிகபட்ச லைக்குகளையும், பதில்களையும் பெறுகின்றன.
* நகரங்களில் சென்னை நகரத்தில்தான் கொண்டாட்ட தருணங்கள் பற்றி அதிகமாக பெண்களால் டுவிட்டர் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. சமூகம், சமூக மாற்றம் பற்றி பெங்களூரு பெண்கள் பதிவுகளை வெளியிடுகின்றனர். கவுகாத்தி பெண்கள் பேஷன் பற்றியும், விருப்பங்கள் குறித்தும், நாட்டு நடப்பு பற்றியும் பதிவுகளை வெளியிடுகிறார்கள்.