ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மசோதா

-அமெரிக்கர்கள் மகிழ்ச்சி!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் படுதோல்வி அடைந்தார் என்பதும் பயன் புதிய அதிபராக ஜோபைடன் வெற்றி பெற்று பதவி ஏற்றார் என்பதும் தெரிந்ததே புதிய அதிபராக பதவியேற்ற ஜோபைடன் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு லட்சம் நிதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பு குறித்து மசோதா இயற்றப்பட்ட நிலையில் அந்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கும் அதிபரின் திட்டத்திற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது

இதுகுறித்த நடந்த வாக்கெடுப்பில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இந்த மசோதா நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்கரின் வங்கி கணக்கில் ரூபாய் ஒரு லட்சம் செலுத்தப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here