பாஜகவில் இணைவாரா (ம்)’ஆக்சன் கிங்’!

-நடிகர், சினிமாத்துறையினர் ஆச்சர்யம் !

தமிழகத்தில் ஏற்கனவே பிரபல நடிகைகள் கெளதமி, குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுமா , சிவாஜி மகன் ராம்குமார் உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் நடிகர் அர்ஜூன் அக்கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 

அதிமுகவுக்கு எதிராக விமர்சனம் தெரிவித்துவந்த விஷால் பாஜகவில் இணையவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் அவர் அதை மறுத்தார்.

இந்நிலையில், நடிகர் அர்ஜூன் விரையில் பாஜகவில் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், நடிகர் அர்ஜூன் சென்னை அடுத்துள்ள அரும்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டிவருகிறார். இதைப் பார்வையிட தமிழக பாஜக தலைவர் எல். முருகன் சென்றபோது, அர்ஜூனை பாஜகவில் சேருமாறு அழைப்பது விடுத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here