-போராட்டத்தில் வன்முறை
மாணவர்களின் இந்த போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் போராட்டக் குழுக்களின் தலைவர்களைக் கைது செய்து அவர்கள் மீது ‘லெஸ் மஜாஸ்ட்டே’ எனப்படும் முடியாட்சி அவமதிப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து சிறையில் அடைத்து வருகிறது.
இந்த நிலையில், தங்களின் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்குழுத் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி தலைநகர் பாங்காக்கில் உள்ள அரண்மனை முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்து விடாத வண்ணம் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தனர்.
அதேபோல் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வராததால் போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.
இருதரப்பு மோதலில் 13 போலீசார் உட்பட 33 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 2 பத்திரிகையாளர்களும் அடங்குவர். மேலும் இந்தப் போராட்டம் தொடர்பாக 30-க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.