– போலீஸ் அதிகாரி உள்பட பலர் பலி
அமெரிக்க மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வைத்துள்ளதால் அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் அங்கு நுழைந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் போலீசாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.