ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள்

 – ரசிகர்கள் கூட்டத்தை தவிர்க்க அஜித் செய்த அசத்தல் காரியம்!!

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்று மக்கள் தீர்ப்பளிக்க காலை முதலே ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் 20 நிமடம் முன்பாகவே சென்னை வேளச்சேரியில் உள்ள திருவான்மியூர் பகுதி வாக்குச்சாவடிக்கு வந்தார்.

ரசிகர்களின் கூட்டத்தை தவிர்க்க நடிகர் அஜித் முன்பாகவே தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்தார். பின்னர் சரியாக 7 மணிக்கு தனது மனைவியுடன் வாக்கினை பதிவு செய்தார்.

இதே போல நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இந்த முறை அரசியலில் ஈடுபடுவார் என பலத்த எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதே போல நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது மகள்களான சுருதிஹாசன், அக்ஷ்ரா ஹாசனுடன் சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.

இதே போல நடிகர் சிவக்குமார் தனது மகன்களாக நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியுடன் சென்னை தி.நகர் வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here