குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், பள்ளன், வாதிராயன் உள்ளிட்ட பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரின் கீழ் கொண்டுவரும் தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.
கடந்த பிப்ரவரி 13 ஆம் பட்டியலினத்தவர் பட்டியலில் மாற்றங்கள் செய்ய அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
அந்த மசோதா மீதான விவாதம் முடிந்து, கடந்த 19 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்த மசோதா கடந்த மார்ச் 22 ஆம் தேதி மாநிலங்களவையில் விவாதத்துக்கு வந்தது.
அப்போது மசோதாவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதையடுத்து, இதை சட்டமாக்க குடியரசுத்லைவர் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து, அது அரசிதழில் வெளிடப்பட்டு சட்டமாக அமலானது.