-மக்களின் ஏமாற்றம் மலைபோல் குவிகிறது
இப்போதெல்லாம் பணமோசடிக்கும்பல் மக்களை ஏமாற்றுவதற்கு புதிய நூதன வழிகளைக் கையாளுகின்றனர். இத்தரப்பை மாக்காவ் ஸ்கேம் என்று அழைக்கின்றனர்.
இன்னும் கூட இத்தரப்பினரின் அழைப்புகளை நம்பி ஏமாறுகின்ற மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் நூதன மோசடி வலையில் அநேகர் சிக்கி பல கோடி வெள்ளியை இழந்திக்கின்றனர். இழந்தும் வருகின்றனர்.
மக்களை நம்ப வைக்கும் கதைகள் இவர்களுக்குக் கிடைத்துவிடுவதால் மக்கள் மிகச்சுலபமாக ஏமாந்துவிடுகின்றனர்.
அண்மையில் குழந்தையின் மருத்துவ செலவை ஈடுகட்ட நன்கொடை திரட்டிய ஒரு தாயின் கணக்கிலிருந்தும் பல ஆயிரம் வெள்ளி கை மாறியிருக்கிறது. இப்போதெல்லாம் இது சாதாரணமாக நடந்துவிடுகிறது என்றால் எது காரணமாக இருக்கிறது. மக்களுக்கு இன்னும் இது பற்றிய விவரம் தெரியவே இல்லை.
மக்களின் அஜாக்கிரதையா?அறியாமையா? அல்லது ஏமாளித்தனம் காரணமா?
இதில் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் நிதானமாகவும் வெகு அக்கறையுடனும் செயல்படக்கூடியவர்கள் வங்கியாளர்களே என்பதாவது புரிகிறதா? வங்கியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்தவர்களாக மக்கள் இருக்க மாட்டார்கள். பொது நடப்புகளை அறிந்தவர்கள் கூட பல லட்சங்களை இழந்திருக்கிறார்கள் என்றால் சாதாரண மக்கள் எம்மாத்திரம்?
வங்கிகள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றுகூறிக்கொண்டிருக்க முடியாது. மக்களை விழிப்புடன் இருக்குமாறு புத்திசொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது.
மாக்காவ் ஸ்கேம் கூட்டம் பெரிய அளவில் செயல்படுகிறார்கள், இவர்கள் பெரும்பாலும் சீன நாட்டிலிருந்து வந்தவர்கள் , வருகின்றவர்கள். இவர்களில் மலேசியர்கள் கணிசமாகவும் சேர்க்கப்படுகின்றனர், செயல்படுகின்றனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இக்குழுவினர் மலேசியர்களை வேலைக்கமர்த்திக்கொண்டும் செயல்படுகின்றனர். விஷயம் தெரியாதவர்கள் இவர்களை நம்பி வேலையில் அமர்ந்து சிறைக்குப்போன கதையும் உண்டு.
இதனால் பொது மக்களைக் கவனமாக இருக்கும்படி கூறுவதைவிட வங்கித்தரப்பு புதிய உத்திகள், தொழில் நுட்பத்திற்கு மாறினால் மட்டுமே இதைக் குறைக்கும் தடுக்கும் சாத்தியம் உண்டு.
மாக்காவ் ஸ்கேம் வலையில் சிக்கி பணம் கையாடப்படும்போதே தடுத்து நிறுத்துகின்ற தொழில் நுட்பத்தை வங்கிகள் கொண்டிருக்க வேண்டும். அதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் சாதாரண மக்களுக்கும் அழைப்புகள் வருகின்றன். அச்சுறுத்டும்போதே வண்கித்தகவல்களை வழங்கிவிடும் அளவுக்கு தகவல்கல் என்கிருந்து கிடைக்கின்றன. யார் வழங்குகிறார்கள். அறியாதவர்கள் தங்கள் விவரங்களைக்கொடுத்துவிடுகின்றனர். அதன் பின் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத்தெரிவதேல்லை. அறிவிக்கப்படுவதுமில்லை. யந்திரம்போல் செயல்பட்டு விவரங்களை வழங்கிவிடுகிறார்கள்.
பெரும்பணம் கைமாறுவதற்கு முன்னமே தடுக்கப்படும் தொழில்நுட்பத்தை பொதுமக்கள் அறிந்திருக்க முடியாது. வங்கிகள் தங்கள் போக்கில் மாற்றம் செய்து, பொதுமக்களையும், அவர்களின் பணத்தையும் காபாற்ற பாதுகாப்பாக இல்லையென்றால் எது உண்மை எது ஏமாற்று என்று தெரியாமல் தங்கள் சம்பளப் பணத்தை இழந்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டுதான் போகும்.
மலேசிய சைஃபர் கிரைம் கூடுதல் கவனம்செலுத்தும் காலத்தில் இருக்கிறார்கள் என்றாலும் பொதுமக்கள் இன்னும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைக்கான ஆலோசனை.
ஏமாமாற்றுகின்றவர்கள் வெகு வேகமாக புது யுக்திகளுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள், அதில் கை தேர்ந்தவர்கள் வேலியில் இருக்கிறார்கள் என்றால் மலேசிய சைஃபர் கிரைம் எப்பாடி செயல்படவேண்டும் என்பதையும் முற்போக்காய் சிந்திக்க வேண்டும்.