பெட்டாலிங் ஜெயா: தேடப்படும் தொழிலதிபர் நிக்கி லியோ சீன் ஹீ அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்தை பகாங் அரண்மனை திரும்ப பெற்றுஜ் கொண்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
அனைத்துலக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மக்காவு ஊழல் மற்றும் பணமோசடி ஆகியவற்றில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் “நிக்கி கேங்”ஐ போலீசார் கைது செய்தனர்.
அண்மையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட 70 சோதனைகள் மூலம் நூறாயிரக்கணக்கான ரிங்கிட் ரொக்கம் மற்றும் மில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.