என் சந்ததியும் தமிழ்ப்பள்ளி, ஆலயங்கள், வறிய நிலைத் தாய்மார்களுக்கு உதவும்

 
தந்தை தட்சிணாமூர்த்தி இங்குள்ள பனோப்டேன் தோட்டத்தின் முதல் தலைமையாசிரியராக பணியாற்றினார். பள்ளி நிலைபெறுவதற்கும் தந்தையின் பங்களிப்பு முக்கிய காரணமாக இருந்தது.

தமிழ்ப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. அவர்களை கொண்டு சேர்க்கவும் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் கெர்லிங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கு செல்ல போக்குவரத்து சிரமத்தை எதிர்நோக்கிவரும் வறிய நிலை மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிப்பதற்கான அத்தனை செலவுகளையும் ஏற்று வருவதாகவும் அவர்  ஆனந்தன் தெரிவித்தார்.

அக்காலகட்டத்தில் எங்கள் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் இருந்தது. உணவுக்குக்கூட சிரமத்தை எதிர்நோக்கிய காலமாகவும் இருந்தது. தாயார் மகேஸ்வரி தோட்ட வேலைக்கு சென்றும் பலகாரம் விற்றும் குடும்பத்தை வழிநடத்த உதவினார்.

கல்வி முக்கியம் என பெற்றோர் உறுதியாக இருந்ததால் நாங்கள் அதில் சிறந்து விளங்கி நல்ல நிலையையும் அடைந்தோம் என இங்குள்ள வசதி குறைந்த தாய்மார்களுக்கு மாதம் 100 வெள்ளி வழங்கும் நிகழ்வை தொடக்கி வைத்து பேசிய வழக்கறிஞரும் தட்சிணாமூர்த்தி அறவாரியத்தின் இயக்குநருமான டத்தோ த. ஆனந்தன் கூறினார்.

கிடைக்கும் வருமானத்தில் பிறருக்கும் உதவவேண்டும் என அப்பாவின் பழக்கம் எனக்கும் இருப்பதால் இங்குள்ள கம்போங் பாசிர் 4-ஆவது மைல் பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அறவாரியத்தின் வாயிலாக பலகாலமாக உதவி வருகிறேன். பள்ளியின் செலவுகளை ஈடுகட்ட அதன்வாரியத்திற்கு மாதம் 1,000 வெள்ளியும் வழங்கி வருகிறேன்.

தொடர்ந்து இங்குள்ள களத்தூர் கருமாரியம்மன் ஆலயத்தின் அர்ச்சகர் சம்பளம் செலவுக்காக மாதந்தோறும் 1,000 வெள்ளி வழங்கி வருகிறேன் என தனது தாயாரின் 90 ஆவது பிறந்த தினத்தில் இங்குள்ள களத்தூர் கருமாரியம்மன் ஆலயத்தில்,12 தாய்மார்களுக்கு தலா 100 வெள்ளி உதவித் தொகையை வழங்கியபோது அவர் தெரிவித்தார்.

கோல குபு பாரு வட்டாரத்தில் 8 தாய்மார்களுக்கும் இதே போன்ற உதவி தொடங்கப்பட்டுள்ளது.இந்த உதவித்தொகை இனி மாதந்தோறும் அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். என் காலத்தில் மட்டுமல்லாது நான் தொடர்ந்து செய்து வரும் சேவைகளை என் சந்ததியினரும் தொடர்ந்து செய்யும் வண்ணம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்துள்ளேன் எனவும் ஆனந்தன் கூறினார்.

–ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here