உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து!

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுக்கு வந்துள்ளது.
அதற்கான முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.

 

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது.திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 0, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, என முடிவு வந்துள்ளது.

இந்நிலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி.கனிமொழி சேப்பாக்கம் தொகுதியில் மிக சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். முதல் முறையாக பொறுப்பேற்கும் உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here