தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட பெண் சிசுவின் சடலம்

பத்து  பகாட் :  ஜாலான் குவாங்கின் பின்னால் உள்ள ஒரு சந்து பகுதியில் ஒரு பிளாஸ்டிக் பெட்டியின் உள்ளே ஒரு தொப்புள் கொடியுடன் ஒரு பெண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

திங்கள்கிழமை (மே 3) மாலை 6.40 மணியளவில் இது தொடர்பில் போலீசாருக்கு தகவல் வந்ததாக பத்து பகாட் ஒ.சி.பி.டி. உதவி ஆணையர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.

பொதுமக்களுக்குள் ஒருவர் பிளாஸ்டிக் பெட்டியை ஒரு வணிக வளாகத்தின் பின்னால் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

 ஆரம்ப விசாரணையில்,  24 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பெட்டி அவ்விடத்தில் கைவிடப்பட்டிருக்கலாம் என்றும் உடல் சிதைவடையத் தொடங்கியதால் அந்த இடத்திலேயே விடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் செவ்வாய்க்கிழமை (மே 4) கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) அந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளிலிருந்து வந்த  ஒரு ஆடவர் குறித்த விவரங்களை தேடி வருவதாக ஏசிபி இஸ்மாயில் கூறினார்.

சடலம் இறப்புக்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இறந்த குழந்தையின் எச்சங்களை ரகசியமாக அப்புறப்படுத்துவதன் மூலம் பிறப்பை மறைத்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 318இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஏ.சி.பி இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான தகவல்களைக் கொண்டவர்கள் உடனடியாக 07-436 3300 என்ற எண்ணில் பத்து பகாட் காவல் தலைமையகத்திற்கு  தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here