பி40 பிரிவினருக்குப் பயனளிக்கக்கூடிய திட்டம்

– ஜரிங்கான் பிரிஹாத்தின் 

புத்ராஜெயா-
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள ஜரிங்கான் பிரிஹாத்தின் திட்டத்தின் வழி நாட்டில் வாழும் சுமார் 8.5 மில்லியன் பி40 பிரிவினர் விவேககக் கைபேசி, தொடர்பு சாதனங்களைப் பெறுவர் என பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

வெ. 3.5 மில்லியன் மதிப்பிலான இத்திட்டத்தை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய நிலையில் அதன் வாயிலாக குறிப்பிட்ட தரப்பினர் இணைய வசதிகளைப் பெறுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 3.5 மில்லியன் வெள்ளியில் 2 மில்லியன் வெள்ளியை அரசாங்கம் நேரடியாக இத்திட்டத்திற்கு செலவிடும். எஞ்சிய 1.5 மில்லியன் வெள்ளியை இலவச இணைய வசதிக்காகவும்  தொடர்பு சாதன, இணைய வசதிக்காக  நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என நேற்று நடைபெற்ற திட்டத்தின் அறிமுக விழாவில் பிரதமர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here