புதுமை வடிவில் சைக்கிள் பாதை!

நகர போக்கு வரத்துகளுக்கு பிரபலமாகிவிடும்!

துபாயிலும் சுவிட்சர்லாந்திலும் புதுமை வடிவிலான சைக்கிள் பாதை தற்போது பரிசோதனையில் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சைக்கிள் ஒரு முக்கியமான நகர போக்குவரத்து வாகனமாக ஆகிவிடும். அப்போது, அதற்கென தனி சாலைகளை நகராட்சிகள் உருவாக்கவேண்டி வரும்.

இரண்டு அல்லது மூன்று வழித்தடம் கொண்ட சைக்கிள் பாதைகளை, எந்த நகரத்திலும், எந்த வளைவு சுழிவு, நெருக்கடிக்கும் ஏற்றவகையில் இருக்கும்படி சோலார் வெலோரூட் அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கும். 

அப்படி வந்தால், ஜெர்மனியை சேர்ந்த கட்டிடக்கலைஞர் பீட்டர் குசியாவின், ‘சோலார் வெலோரூட்’ மிகவும் பரவலாகிவிடும்.  சைக்கிள் ஓட்டுவோரை வெயில், மழை, சூறாவளிக் காற்றிலிருந்து காக்க, வளைந்த கூரை. அந்தக் கூரையிலேயே சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பலகைகள்.இப்படிப்பட்ட ஒரு சிறப்புப் பாதை, ஒரு கி.மீ.,க்கு 2,000 எம்..டபிள்யு.எச்., அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்கிறார்  வடிவமைப்பாளர் குசியா.

மேலும், இரவு நேரங்களில் கூரையில் நல்ல வெளிச்சம் தரும் விளக்குகள் இருக்கும். எனவே, சைக்கிள் ஓட்டிகள் மட்டுமல்ல, பாதசாரிகளும் பாதுகாப்பாக இரவில் இந்த சிறப்புப் பாதையை பயன்படுத்தலாம்.

வழியெங்கும் இலவசமாக மொபைல் சார்ஜ் செய்யும் வசதிகளும் இதில் உண்டு. தவிர, இதில் பயன்படுத்தப்படாத மின்சாரத்தை, நகர மின்வாரியத்திற்கு நேரடியாக வழங்கவும் வோலோரூட்டில் வசதி உண்டு. எனவே நிச்சயம் நவீன நகர்களில் இதற்கு மவுசு ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here