சீன மருந்து வேண்டாம்

 -கிம் அதிரடி

ஆராய்ச்சியாளர்கள் , மருத்துவர்கள் சீனாவிற்கு அருகில் இருக்கும் வடகொரியாவில் எப்படி கொரோனா பரவல் இல்லாமல் இருக்கும், அந்த நாடு உண்மையை மறைப்பதாக கூறி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் இருந்தாலும், தங்கள் நாட்டில் கொரோனா இல்லை, ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வருகிறது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில், சீனா நாட்டின் மருந்துகளை தலைநகரில் பயன்படுத்த தடை விதித்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் எப்போதும் போல் வடகொரியா கொரோனா விஷயத்திலும், ஒரு மர்மம் நிறைந்த நாடாகவே இருக்கிறது. இந்நிலையில், வடகொரியாவில் உயர் அதிகாரி ஒருவர் சீனா மருந்தை பயன்படுத்தி வந்த நிலையில், திடீரென்று உயிரிழந்துள்ளார்.

60 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி, கிம் ஜாங் உன்னிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையில், உயிரிழந்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த கிம் ஜாங் உன், தீவிர நடவடிக்கையாக சீனாவின் கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து சீன மருத்துகளுக்கும் நாட்டில் தலைநகரில் உள்ளே நுழையக் கூடாது என்று அறிவித்திருக்கிறார்.

இங்கிருக்கும் பிரபல மருத்துவமனைகள் சீன மருந்துகளை பயன்படுத்தத் தடையும் விதிக்கபட்டிருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here