வைசாக் தின கொண்டாடங்கள் கிடையாது

புத்ராஜெயா: எம்.சி.ஓ விதிகளுக்கும் எஸ்.ஓ. பி யின் கீழ் வைசாக் தினத்தன்று கோவில்களில் பக்தர்களிற்கு அனுமதியில்லை என்று தேசிய ஒற்றுமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திங்களன்று (மே 24) வெளியிட்ட ஒரு அறிக்கையில், வைசாக் தின பூஜைக்கு ஒரு துறவி மற்றும் 10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவிற்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியது.

வைசாக் தினம் வருகின்ற மே 26 அன்று கொண்டாடப் பருகின்ற அதே வேளை, வைசாக் தினத்தில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பூஜைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.

வழமையாக நடைபெறும் ஊர்வலங்களுக்கு அனுமதியில்லை. மாநிலங்களுக்கிடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும்
அறிவித்துள்ளது.

மே 21 அன்று நடைபெற்ற  கோவிட் -19 மேலாண்மை குறித்த சிறப்பு தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) கூட்டத்தில் எஸ்ஓபிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இக் கூட்டத்திற்கு பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here