கோலாலம்பூர்: கோவிட்-19 தடுப்புசியினை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்யப்பட்ட நாட்டிலுள்ள 144 ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் 5,000-ற்கும் மேற்பட்ட ஊடகப் பணியாளர்களுக்கு, விரைவில் கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தேதி வழங்கப்படுமென, அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
நாட்டில் இதுவரை 5,867 ஊடகப் பணியாளர்கள் தடுப்பூசிக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்துள்ளனர் என்றும் ஊடகத்துறையினரை முன்களப் பணியாளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதால், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு கோவிட் தடுப்பூசியைச் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.