மாறும் சகாப்தத்தில் மாண்புக்கு ஏற்ற மகுடம்

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
போட்டியின்றித் தேர்வு

கோலாலம்பூர்-
மஇகாவின் 10ஆவது தேசியத் தலைவராக கட்சி கிளைத் தலைவர்களின் அமோக ஆதரவுடன் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் போட்டியின்றித் தேர்வு பெற்ரிருக்கிறார்.

மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கட்சி தலைமையகத்தில்  நடைபெறுகிறது. டான்ஸ்ரீ கே.ராஜு தேசியத் தலைவர் தேர்தல் குழுத் தலைவராகப் பணியாற்றினார்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்குப் போட்டி கூடாது என்பதே பெரும்பான்மை கிளைத் தலைவர்களின் விருப்பமாக இருந்தது. நாடு முழுமையிலும் உள்ள கிளைத் தலைவர்கள் அவரின் பெயரை மட்டும்தான் இதுவரையில் முன்மொழிந்து வழிமொழிந்திருக்கின்றனர்.

நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அப்போதைய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியம் பதவி விலகியதைத் தொடர்ந்து 2018, ஜூலை 14ஆம் தேதி கட்சியின் 9ஆவது தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தேர்வுசெய்யப்பட்டார்.

அவரின் சீரிய தலைமைத்துத்தால் மஇகா அனைத்து ரீதியிலும் வலுப்பெற்றது. ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கடன்கள் முற்றாகச் செலுத்தி முடிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 100 கோடி வெள்ளி மதிப்பிலான கட்சி சொத்துகளை கட்சிக்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் இவர்.

அனைத்துக்கும் உச்சமாக தற்போது உள்ள மஇகா தலைமையகக் கட்டடத்திற்குப் பக்கத்தில் உள்ள நிலம் மீண்டும் மஇகா வசமே வந்ததற்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 

கட்சியில் அவர் கொண்டு வந்த மறுசீரமைப்புப் பணிகள் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தது.

இந்நிலையில்  தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கட்சியின் 10ஆவது தேசியத் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு பெற்றதில் வியப்பில்லை .

உறுப்பினர்கள் அனைவரின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பும் முடிவும்  இதுதான்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here