பள்ளி முழுக்க பிணம்; தோண்ட தோண்ட வரும் சிறுவர்களின் எலும்பு கூடுகள்.. என்ன காரணம்?

டோரண்டா: ஒரு பள்ளி முழுக்க எலும்பு கூடுகள் இருக்கிறதாம்.. தோண்ட தோண்ட வந்துவிழும் உடல் உறுப்புகளை கண்டு அதிர்ந்து போயுள்ளனர் கனடா நாட்டு போலீசார்.

அந்த காலத்தில் இருந்தே ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு குடியேறுவது என்பது இயல்பாக நடந்து வரக்கூடிய விஷயம். ஆனால், இப்படி குடியேறுபவர்களை, ஏற்கனவே அந்த நாட்டில் ஏற்கனவே உள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை.

இனம்புரியாத கோபமும் வன்மமும் அவர்கள் மீது எழுந்து வருகிறது. 100, 200 வருஷங்கள் அங்கேயே குடியிருந்தாலும், குடியேறி வந்தவர்கள் என்ற வெறுப்பு இவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.. இது உலகின் பல நாடுகளிலும் நிகழ்ந்து வருகிறது.. அதற்கு வல்லரசான அமெரிக்காவும் விலக்கல்ல.

இனம்புரியாத கோபமும் வன்மமும் அவர்கள் மீது எழுந்து வருகிறது. 100, 200 வருஷங்கள் அங்கேயே குடியிருந்தாலும், குடியேறி வந்தவர்கள் என்ற வெறுப்பு இவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.. இது உலகின் பல நாடுகளிலும் நிகழ்ந்து வருகிறது.. அதற்கு வல்லரசான அமெரிக்காவும் விலக்கல்ல.

 

பூர்வகுடி மக்கள்

400 வருஷத்துக்கு முன்பேயே ஐரோப்பியர்கள் வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள்.. அப்போதே ஏராளமான பூர்வகுடிமக்கள் அங்கு வசித்து வந்தனர்.

ஆனால், ‘இவங்க நாளைக்கு நமக்கே பிரச்சனையாக வந்துவிடுவார்களோ’ என்ற ஐயம் ஐரோப்பியர்களுக்கு எழுந்தது. அதனாலேயே பூர்வகுடி மக்களை கொடூரமாக கொலை செய்வதும் நடந்தது. இதற்கு பெயர்தான் இனப்படுகொலை. இந்த மாதிரி லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

குடிமக்கள்

ஐரோப்பியர்கள் பூர்வ குடிமக்களுக்காக சில பள்ளிகளை நடத்தி வந்தனர். அப்படி கம்லூப்ஸ் என்ற இடத்திலும் ஒரு பள்ளியை கட்டினார்கள். அங்கு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்தான் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. இந்த பள்ளியிலேயே ஹாஸ்டல் வசதியும் உண்டு. எனவே, குடியேறிய மக்களில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளாவது நன்றாக படிக்கட்டும் என்று நினைத்து இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

புகார்கள்

ஆனால், திடீர் திடீரென குழந்தைகள் மாயமாகி உள்ளனர். இவர்கள் குறித்த புகார்களையும் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தந்துள்ளனர். ஆனாலும் குழந்தைகள் கிடைக்கவே இல்லை. தற்போது கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வ குடிமக்களின் பள்ளி வளாகத்தில், 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவாம். இந்த பள்ளியை 1890-ல் கட்டி உள்ளனர்.1969ம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.

 

எலும்புக் கூடுகள்

பிறகு அரசே இந்த பள்ளியை எடுத்து நடத்த முயன்றுள்ளது. ஆனாலும், 1978-ல் பள்ளி மூடப்பட்டுவிட்டது. அந்தவகையில், இந்த பள்ளியை எடுத்து நடத்தியபோதே, பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்க கூடும் அல்லது வேறு வகையில் உயிரிழக்க செய்து, பெற்றோர்களுக்கும் தகவல் தராமல் அங்கேயே புதைத்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்டுகிறது.

ரேடார் உதவியுடன் அந்த 215 எலும்புக்கூடுகளையும் கண்டுபிடித்துள்ளனர். ஆங்காங்கே சிறுவர்களின் சடலங்களின் உறுப்புகளையும் சேகரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here