பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஐ.ஜே.என். மருத்துவமனையில் அனுமதி

பெட்டாலிங் ஜெயா: பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தேசிய இதய சிகிச்சை மையம் (ஐ.ஜே.என்) அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் உடல் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஹாடியின் மகன் முஹம்மது கலீலும், சிலர் கூறிவது போல,தந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக மறுத்தார்.

அந்த செய்தி (அவர் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து) பரப்பப்பட்ட பிறகு எனக்கு சில தகவல்கள் கிடைத்தன.பெரும்பாலான செய்திகள் பொய்யானவை, மிகைப்படுத்தப்பட்டவை.

நான் அவ்வப்போது அவரது நிலை குறித்து ஒரு தகவலை வழங்குவேன் என்று அவர் முகநூலில் கூறினார். தனது தந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் கூறியிருந்தார். தனது தந்தையின் மீட்புக்காக அனைவருக்கும் பிரார்த்தனை செய்யுமாறு கலீல் அழைப்பு விடுத்தார்.

அவர் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here