யானை வழித்தடமான 1050.2 ஹெக்டர்; 30 நாளில் மீட்கப்பட்ட வனப்பகுதி

கோயம்புத்தூர்: கோவையில் வெறும் ஒரே மாதத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும்பாலான வனப்பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோவையின் வனப்பகுதியின் அளவு 12654 ஹெக்டேராக உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் வனப்பகுதிகள் பல ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன. முக்கியமாக யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று வனத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீரென ஆலோசனை மேற்கொண்டார்.

நிதியமைச்சகம் நம்பிக்கை வனப்பகுதிகள் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ரிப்போர்ட் கேட்டார். ஒரு மாதத்திற்கு முன்பே இது தொடர்பாக விசாரிக்கும்படி அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்றே அவர் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தார். மீட்பு கோவையில் வனப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில், தற்போது கோவையில் வனப்பகுதிகள் வேகமாக மீட்கப்பட்டு வருகின்றன.

முக்கியமாக யானை வழித்தடம் என்று அறியப்படும் காட்டுப்பகுதியில் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி அருகே பல காடுகள் ஆய்வு செய்யப்பட்டு இப்படி மீட்கப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்பு காடுகளுக்கு அருகே உள்ள நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்கள் கண்டறியப்பட்டு, அந்த நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு நிலங்கள் எங்கெல்லாம் இருக்கிறது, அதன் விவரங்கள் என்ன என்பது குறித்த முழு பட்டியலை அமைச்சர் ராமச்சந்திரன் ஏற்கனவே கேட்டு இருந்தார். அதேபோல் இதுவரை மீட்கப்பட்ட நிலங்கள் எவ்வளவு, அந்த நிலங்கள் எங்கு இருந்தன, அங்கு மீண்டும் மரங்கள் நடுவது குறித்தும் விவரங்களை கேட்டு இருந்தார்.

இணைப்பு இதையடுத்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்கள் நேற்று தமிழ்நாடு அரசு வனப்பகுதி நிலங்களோடு இணைக்கப்பட்டன. தினமும் எடுக்கப்பட்ட சர்வே, பத்திர சோதனை, கள ஆய்வு மூலம் இந்த வனப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 1050.2 ஹெக்டேர் வனப்பகுதி வனப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. ஆய்வு இதுபோக இன்னொரு பக்கம் ஆக்கிரமிப்பு செய்யப்பட வனப்பகுதி குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த 1050 ஹெக்டேர் வனப்பகுதியில் பெரும்பான்மையான பகுதி யானை வழித்தடம் ஆகும்.

தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்த நிலங்கள் பல இப்படி மீட்கப்பட்டுள்ளது. முக்கியமான யானை வழித்தடமான கல்லார் பகுதியிலும் 50 ஹெக்டேர் வனப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. யானை வழித்தடம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இவ்வளவு ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. 30 நாட்களில் இவ்வளவு நிலத்தை மீட்டதில் அமைச்சரை போலவே கோவை ஆட்சியர் நாகராஜன் பங்கும் முக்கியமானது. அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவை தொடர்ந்து ஆட்சியர் துரிதமாக செயல்பட்டு, நிலங்கள் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, அதை மீட்டு இருக்கிறார். கோவை அளவு இப்படி புதிதாக வனப்பகுதி இணைக்கப்பட்டதன் மூலம் கோவையில் வனப்பகுதியின் அளவு 12654 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. யானை செல்லும் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால், கோவையில் யானைகள் பாதிக்கப்பட்டன, அவற்றின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஊருக்குள் யானை வரும் நிலை ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here