பிரபல பள்ளியின் மோசமான நடவடிக்கை -பெற்றோர்கள் கொந்தளிப்பு!

 கடுமையான தண்டனை தேவையா..?

இங்கிலாந்தில் 13 வயது சிறுமி இறுக்கமான பேண்ட் அணிந்ததற்காக பள்ளியால் கடுமையாக தண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் ட்ரோவ்ரிட்ஜில் உள்ள பிரபல பள்ளியான தி ஜான் ஆஃப் கவுண்ட்-ல் மாணவிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருவதாக மிரர் பத்திரிகையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி லூசி டேனியல்ஸ் ( 35 ) என்பவர் 13 வயது சிறுமியான தனது மகள் இந்த பள்ளியினால் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார் அளித்து வருகிறார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், “ஊரடங்கு காரணமாக எனது மகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலையில் தி ஜான் ஆஃப் கவுண்ட் பள்ளி தான் தனது மகளுக்கு கால்ச்சட்டையை வழங்கியுள்ளது.

ஆனால் அதே பள்ளி தான் தற்போது எனது மகள் கால்ச்சட்டையை இறுக்கமாக அணிந்திருப்பதாகக் கூறி அவளை தொடர்ந்து தனிமையில் அமர்த்தி வருகிறது. அந்த பள்ளியில் உள்ள ஒவ்வோர் ஆசிரியரும் ஒவ்வொரு விதமான கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். இந்த கால்சட்டை போதுமானது என்று ஒரு ஆசிரியரும், மற்றொருவர் இந்த கால்சட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்து எனது மகளை தொடர்ந்து தனிமையில் அமர்த்தி வருகின்றனர் என்று அவர் பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அதேபோல் லூக் க்ரோவர் என்பவர் தனது 14 வயது மகளும் அந்த பள்ளியில் கால்சட்டை காரணமாக தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் அந்த பள்ளியினுடைய இந்த மோசமான செயல் மாணவர்களது பெற்றோர்களுக்கிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here