சிறப்பு அனுமதியுடன் புறப்பாடாம்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது, இப்படத்தை சிவா இயக்கி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.