கடல் வெப்பம் அதிகரிப்பதால் சுறா மீன்களுக்குப் பாதிப்பா?

மலேசியாவில் பவளப் பாறைகளுக்கு இடையே காணப்படும் Reef வகை சுறா மீன்களுக்கு மர்மான தோல் நோய் ஏற்பட்டு பாதிக்கபடுவதாக அறியப்பட்டிருக்கிறது.

கடலில்  வெப்பத்தின் அளவு அதிகரிப்பே அதற்குக் காரணமாக இருக்கலாமென கடல்துறை உயிரியல் நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.

முக்குளிப்பாளர்கள் இடையே பிரபலமான அத்தகைய  இவ்வகை சுறா மீன்கள் வழக்கமாகக் கூட்டமாகவே வாழும் தன்மை கொண்டது என முக்குளிப்பார்கள் கூறுகின்றனர்.

தோல்பதிப்புற்ற  ஒரு சுறாவின் படம் இப்போது  சமூக ஊடகத்தில் அதிகமாகப் பகிரப்படுகிறது.

ஏப்ரல் மாதம் போர்னியோ தீவில் எடுக்கப்பட்ட அந்தப் படங்களில் சுறாவின் தலையில் புண் போன்ற அடையாளங்கள் காணப்படுகின்றன.

பல சுறாக்களின் உடலில் அதே போன்ற அடையாளங்கள் இருப்பதை முக்குளிப்பாளர் குழுக்களும் பாதுகாப்புக் குழுக்களும் கவனிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கடலில் ரசாயனங்கள் கலப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது என்று  நிபுணர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here