வெளிப்படையாகவே அவர் பேசினார்

பைடன்-புடின் சந்திப்பு. சுவிஸ் ஜனாதிபதி பாராட்டு!

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி Parmelin ரஷ்ய ஜனாதிபதி புடின் சுற்றிவளைத்து பேசவில்லை என்று அவரை புகழ்ந்து கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி பார்மெலின்  ஜெனீவாவில் நடைபெற்ற ஜோ பைடன்-புடின் சந்திப்பு குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். அதில் இரு தலைவர்களுடைய சந்திப்பில் அவர்கள் பேச தொடங்கியது தான் மிக முக்கியமான தருணமாக இருந்ததாகவும், சுமார் ஐந்து நிமிடங்கள் ஜோ பைடன்-புடின் இருவரும் தொடர்ந்து பேசியதாகவும், அவர்களுடைய உரையாடல் சிறப்பாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இரு தலைவர்களுடைய இந்த சந்திப்பிற்கு செய்யப்பட்ட ஏற்பாட்டினை முடிக்கும் வரை மன அழுத்தம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய வெளிப்படையான தன்மையை சுவிஸ் ஜனாதிபதி  பாராட்டியுள்ளார். மேலும் புடின் எதையும் சுற்றி வளைத்து பேசவில்லை என்றும், அவர் ஜோ பைடன் கூறுவதை முதலில் முழுமையாக கேட்ட பிறகே பதிலளித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு இரு தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை இனிமையாகப் பரிமாறிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here