கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு கிரீன் பாஸ்

இந்தியாவுக்குப் பணிந்த ஐரோப்பிய நாடுகள்.!

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு கிரீன் பாஸ் தருவதற்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் உலக நாடுகள் முழுவதும் போடப்பட்டு வருகின்றன. ஆனால், ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், கோவிஷீல்டை ஏற்காவிட்டால் ஐரோப்பிய பயணிகள் அனைவரும் கட்டாய தனிமை என இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இதனையடுத்து சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐரோப்பாவில் புதிய தடுப்பூசி பாஸ்போர்ட் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், தற்போது கோவிஷீல்டுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here