ஒரு கோடி சந்தாதாரர்களை ஈர்த்த நிகழ்ச்சி

 யூடியூப் சேனல் வழி கிராமிய சமையல்

இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்குத் தொடங்கி, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் பலரும் சமையல் தொடர்பான யூடியூப் சேனல்தான் தொடங்கியுள்ளனர். இதில் முன்னணியில் உள்ள சேனல்தான் வில்லேஜ் குக்கிங் சேனல்.

புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்களம் ஊராட்சி சின்னவீரமங்களம் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் சேர்ந்து கிராமத்து முறையிலான சமையல் செய்து, அதை வில்லேஜ் குக்கிங் (Village cooking channel) என்ற யூடியூப் சேனலில் (Youtube) பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இந்த வீடியோவைப் பார்த்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஜனவரியில் கரூர் தேர்தல்பிரச்சாரத்தின்போது இவர்களை கரூருக்கு வரவழைத்து அவர்களோடு சமைத்து உணவருந்தினார்.

(Subscriber) சேர்ந்துள்ளனர். இதற்காக யூடியூப் நிறுவனம் இவர்களுக்கு டைமண்ட் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த சேனலை சின்ன வீரமங்கலம் ஏப்ரல் 2018 இல் தொடங்கினார், மேலும் அவரது பேரக்குழந்தைகளான முருகேசன், தமிழ்செல்வன், அய்யனார், முத்துமணிக்கம், சுப்பிரமணியன், பெரியதம்பியும் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே இவர்கள் தங்களது வருமானத்தில் இருந்து ரூ.10லட்சத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அண்மையில் வழங்கினர். இது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர்களது இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here