ரொட்டி லோரி மீது கார் மோதி பெண் பலத்த காயம்

செகாமட்:  கம்போங்  தாசேக்கில் ரொட்டி விநியோக லோரி மீது கார் மோதியதில் ஒரு பெண் பலத்த காயமடைந்தார். ஜாலான் தாசேக் அலாய் மசூதிக்கு அருகே நடந்த இந்த விபத்து புதன்கிழமை (ஜூலை 7) மாலை 4.45 மணியளவில் பதிவாகியுள்ளதாக பண்டார் பாரு செகாமட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை தலைவர் அபுபக்கர் முகமது தெரிவித்தார்.

அந்த பெண் ஜாலான் செகமாட்-மூவாரில் இருந்து பூலோ கசப்பை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனம் ரொட்டி லோரி மீது மோதியது, அது எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்தது. நாங்கள் அப்பெண்ணை வெளியேற்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினோம்.

அதே நேரத்தில், ஒரு டன் டிரக்கில் இருந்து ஓட்டுநரை மீட்டோம்.  அவரது வாகனம் பக்கவாட்டில் திரும்பி இருந்தது. அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சையை வழங்கியது என்று அவர் கூறினார். பலத்த காயமடைந்த  இருவரையும் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக செகாமட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here