6 ஆயிரம் அடி உயரத்தில் ஊஞ்சல் அறுந்து விபரீதம்

-வாட்ஸ் அப்பில் வைரல் வீடியோ

துபாய்:

ரஷ்யாவின் தஜகெஸ்தானில் உள்ள சுலக் பள்ளத்தாக்கு 6,300 அடி உயரம் கொண்டது. இந்த பள்ளத்தாக்கின் விளிம்பில் சங்கிலியால் ஆன‌ ஊஞ்சல் அமைத்துள்ளனர்.

ஆபத்தான அந்த ஊஞ்சலில் அங்கு வருபவர்கள் உற்சாகமாக அமர்ந்து ஆடுவார்கள். சில தினங்களுக்கு முன்பு 2 பெண்கள் ஊஞ்சலில் அமர, பின்னால் இருந்து இளைஞர் ஒருவர் ஊஞ்சலை தள்ளி விடுகிறார்.

ஊஞ்சல் பள்ளத்தாக்கில் சென்று ஆடி திரும்பிய நிலையில், திடீரென ஊஞ்சலின் இரும்பு சங்கிலி அறுந்ததால், அதில் அமர்ந்திருந்த 2 பெண்கள் பள்ளத்தாக்கில் விழுந்தனர்.

இதை கண்டு அங்கிருந்தவர்கள் அலறினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக கீழே விழுந்த 2 பெண்களும் அங்கிருந்த பள்ளத்தின் பக்கவாட்டில் விழுந்து கிடந்தனர். 

அவர்கள் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து அந்நாட்டில் உள்ள சுற்றுலாத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கமெண்ட்: உயிர் ஊ(ஞ்) சலாடியது என்பது இதுதானோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here