விரைவு ரயில் , பேருந்து நிலையங்கள் தற்காலிக தடுப்பூசி மையங்களாக செயல்படுகின்றன.

புத்ராஜெயா, ஜூலை 19:

புத்ரா ஹைட்ஸ் எல்.ஆர்.டி நிலையம் மற்றும் செராஸ் செலாத்தான் ரேப்பிட் பேருந்து நிலைய வளாகம் ஆகிய போக்குவரத்து மையங்கள் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இன்று புத்ரா ஹைட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் உள்ள இந்த தடுப்பூசி மையம் 2,598 பிரசாரண ரயில் சேவை ஊழியர்கள் மற்றும் மாஸ் ரேப்பிட் டிரான்ஸிட் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கான தடுப்பூசி சேவையினை ஆரம்பித்துள்ளது.

தொடர்ந்து, செராஸ் செலத்தான் ரேப்பிட் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தடுப்பூசி மையம் வரும் புதன்கிழமை ஜூலை 21 தொடங்கும் என்றும் இதில் நிறுவனத்தின் பேருந்து சேவை நடவடிக்கைகளில் 2,914 ஊழியர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

இம்மையங்களில் மக்கள் கூட்டம், வரிசை கட்டுப்பாடு, தளவாடங்கள் மற்றும் பதிவுகளுக்கு உதவ பிரசாரண தனது ஊழியர்களிடையே தன்னார்வலர்களை நியமித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.

மேலும் வாடகைக் கார் ( taxi)  மற்றும் இ-ஹெயிலிங் (e-hailing) பிரிவுகளில் இருந்து 48,973 பெயர்கள் மற்றும் 69,458 பி-ஹெயிலிங் (b-hailing)ரைடர்ஸ் பெயர்களையும் கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழுவிற்கு தடுப்பூசி போடுவதற்காக தனது அமைச்சகம் சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார்.

“தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையில், 56% டாக்ஸி மற்றும் இ-ஹெயிலிங் ஓட்டுநர்கள் தங்களது தடுப்பூசி நியமனங்களைப் பெற்றுள்ளனர் என்றும் மேலும் 49% பி-ஹெயிலிங் ரைடர்ஸும் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஜோகூர், பினாங்கு, பகாங், திரெங்கானு, பேராக் மற்றும் சிலாங்கூர் ஆகிய இடங்களில் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் தடுப்பூசி மையங்களைத் திறக்க அமைச்சு ஒப்புதல்களைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் போர்ட் கிளாங் தடுப்பூசி மையத்திற்கு கூடுதலான் அளவு தடுப்பூசிகள் பெறப்படுகின்றன என்றும் இந்த முயற்சி 54,000 க்கும் மேற்பட்ட போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு பயனளிக்கும்” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here