மெய்க்காப்பாளருக்கு கோவிட் -19 தொற்று; வீட்டு தனிமைப்படுத்தலில் பினாங்கு முதல்வர்.

ஜார்ஜ் டவுன், ஜூலை 25:

பினாங்கு முதல்வர் சோவ் கோன் யோவ் தனது மெய்க்காப்பாளர்களில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று இனங்காணப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) முதல் மாநில சுகாதாரத் துறையிலிருந்து இந்த உத்தரவு வந்துள்ளது என்றார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) ஒரு முகநூல் பதிவில் சோவ் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) அவருக்கு மேற்கொள்ளப்பட்ட RT-PCR பரிசோதனையில் அவர் எதிர்மறையான (negative) பதிலை பெற்றார் என்றும் கூறினார்.

மேலும் எதிவரும் புதன்கிழமை (ஜூலை 28) மற்றொரு சோதனைக்கும் உட்படுத்தப்படுவார் என்று சோவ் கூறினார்.

அவர் இறுதியாக இங்குள்ள திவான் ஸ்ரீ பினாங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) காலை ரிக்‌ஷா ஓட்டுநர்களுக்கான தடுப்பூசி பயிற்சியை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here