பணத்திற்கு ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சகோதரர்கள் கைது

கெடா, சுங்கை பெட்டானியில் உள்ள ஒரு பூக்கடையில் ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட வீடியோவில் சிக்கிய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி அறிக்கையின்படி, 29 மற்றும் 36 வயதுடைய உடன்பிறப்புகள் பணத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது எந்தவொரு முன் குற்றப்பதிவும் இல்லை.

சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த சகோதரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கோலா மூடா காவல்துறை தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.

அதே நாளில் போலீஸ் புகார் செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டதாக ஹரியன் மெட்ரோ தெரிவித்துள்ளது.  இரு சகோதரர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அட்ஜ்லி கூறினார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 மற்றும் 506 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதை  விடுத்து போலீசாருக்கு தகவல்  வழங்குமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here